Powered By Blogger

Tuesday 12 April 2011

தபூசங்கரின் 'விழி ஈர்ப்பு விசை'

எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியவை தாம் - எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே. . .
-------------------------------------------------------------
கும்பலில் எல்லாம் நீ போகாதே
யார் யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை. . .
-------------------------------------------------------------
தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது
-------------------------------------------------------------
சற்றுமுன் நீ நடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.
 
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்...
-------------------------------------------------------------
(தபு சங்கரின் 'விழி ஈர்ப்பு விசை' நூலிலிருந்து ...)

Monday 11 April 2011

அரசு கேபிளும் SUN Tv யும் ...

அரசு கேபிளால் SUN Tv க்கு பாதிப்பில்லை:- அரசு கேபிள் டிவி திட்டம் எந்த ஆட்சி வந்தாலும் நடக்காத விஷயம். அது ஜெ வந்தாலும் நடக்காது. முதலில் DTH வருகையால் அது அழிந்து கொண்டிருக்கும் தொழில். அப்புறம் SUN Tv ய ஒழிக்கிறேன்னு அரசு கேபிள் கொண்டுவந்தா அதுவும் சாத்தியம் இல்லே. SUN TV க்கு 'கேபிள்' மெயின் பிசினஸ் கிடையாது. இதுல beauty என்னன்னா அவங்க கேபிள் தொழிலுக்கு வந்ததே அத அழிக்கிறதுக்கு தான். அவங்களுக்கு இப்போ SUN DTH தான் மெயின். கேபிள் தொழிலில் இருப்பவர்கள் அதுக்கு ஒத்துக்க மாட்டங்கன்னு தான் அவங்களே கேபிள் தொழில கையில் எடுத்தது, முடிந்தளவுக்கு எல்லா ஊர்லயும் உள்ள கேபிள்ல கையில் எடுத்துட்டு அத டம்மி பண்ணிட்டு SUN DTH அ success பண்றதுக்கு தான். SUN DTH success ஆயிட்டுன்னா எந்த கேபிள்காரனும் அவங்களுக்கு தேவையில்லை. மக்கள் டு சன். சன் டு மக்கள். இது தான் அவங்க நோக்கம். இன்னொன்னு தெரியுமா?? கேபிள் அரசுடைமைக்கப்பட்டாலும் அதனால பயன்பட போறதும் அவங்க தான். எந்த கவர்மன்ட் வந்தாலும் இனி புதுசா ஒயர் விரிச்சு பிசினஸ் பண்ண முடியாது. Existing கேபிள் தொழிலார்கள்ட்ட தான் அத கொடுத்து நடத்த முடியும். அதாவது SUN க்ரூப்ட்ட தான். அப்படி முடியாது.. நாங்களே பன்னுவோம்னா இப்போ இருக்கிற சின்ன சின்ன கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம் பண்ணுவாங்க. எந்த கேபிள் ஆபரேட்டரும் SUN Tv இல்லாம தொழில் பாக்க முடியாது. அதனால யார் ஆட்சிக்கு வந்தாலும் அவங்க SUN Tv க்கு ஆதரவா தான் இருப்பாங்க. அதுவுமில்லாம இப்போ தனியார் பண்ற கேபிள் தொழில் மாதிரி கவர்மன்ட் சிறப்பா பண்ண முடியாது. அதுவும் SUN DTH வளர்ச்சிக்கு தான் உபயோகமாயிருக்கும். ஜெ மக்களிடம் பேர் வாங்க இது போன்று அறிக்கை விட்டாலும் அழிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலுக்கு இனி கவர்மன்ட் இன்வெஸ்ட் பண்ணுவது அறிவுரைக்கு உகந்ததல்ல.  இது தெரிஞ்சும் அரசு கேபிள் டிவிக்கு கலைஞர் 400 கோடி invest பண்ணியது தப்பு.